சிங்கப்பெண் சிறப்பு படை (SSF) – முக்கிய அம்சங்கள்
🔹 01.09.2026–30.09.2026: 1,045 புகார்களுக்கு நேரில் சென்று நடவடிக்கை.
🔹 15 காணாமல் போன பெண்கள், 16 காணாமல் போன குழந்தைகள் கண்டறியப்பட்டனர்.
🔹 SSF தலையீட்டின் மூலம் 75 வழக்குகள் பதிவு.
🔹 கல்வி நிறுவனங்களில் 2,812, பிற இடங்களில் 11,787 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
🔹 புலம்பெயர் தொழிலாளர்களிடம் 706 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
🔹 57,183 ஹாட்ஸ்பாட்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன.
🔹 25 அறிவுசார் குறைபாடுடையோர் (22 பெண்கள், 3 ஆண்கள்) மீட்கப்பட்டனர்.
🔹 17 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டன.
🔹 227 பள்ளி இடைநிற்றல் குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
கடந்த வார முக்கிய நடவடிக்கைகள்
🔸 சென்னை – 27.09.2026: பேருந்தில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட ஒருவர் கைது.
🔸 தென்காசி: 17 வயது மாணவி தொடர்பான புகாரில் 2 பேர் கைது.
🔸 கோயம்பேடு – 29.09.2026: பெண்ணை அனுமதியின்றி வீடியோ பதிவு செய்த ஒருவர் கைது.
🔸 குறும்படப் போட்டி: பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு; கடைசி நாள் – 10.10.2026.